ஹரியானா மாநிலம் குருகிராமில் பிஸியான சாலையின் நடுவே தனது ஸ்கார்பியோ காரை நிறுத்திவிட்டு, ஒரு நபர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொது ஒழுக்கத்தை மீறிய இந்தச் செயல் குறித்து பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிலளித்துள்ள குருகிராம் காவல்துறை, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தச் சம்பவம் நடந்த துல்லியமான இடம், தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்களை வழங்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“>

 

முழுமையான தகவல் கிடைத்தவுடன் அந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.