ஓமன் நாட்டுக்கு அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ‘VIRAT 1’ என்ற இந்தியக் கப்பல் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாகக் கடலில் மூழ்கிய அதிர்ச்சிச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இந்தியக் கப்பல் பழுதடைந்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கியதும், அதிலிருந்து அவசரக் கால உதவி சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை (US Navy) மற்றும் விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் சென்று கொண்டிருந்த பிற வணிகக் கப்பல்கள் (Merchant Ships) உடனடியாக மீட்புக் களத்தில் குதித்தன.

அனைத்துத் தரப்பினரின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையின் காரணமாக, மூழ்கிய ‘விராட் 1’ கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்திய மாலுமிகளும் எவ்வித ஆபத்துமின்றி மிக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடுக்கடலில் என்ஜின் கோளாறால் கப்பல் மூழ்கிய போதிலும், அமெரிக்க ராணுவம் மற்றும் வணிகக் கப்பல்களின் சமயோசித உதவியால் 14 இந்தியர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட இந்த நிம்மதியான செய்தி தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.