விஷுவல் கேப்பிடலிஸ்ட்  தரவுகளின் அடிப்படையில், உலக நாடுகள் பலவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘ஐபோன் 17 ப்ரோ’ (256ஜிபி) மாடலின் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு நாட்டிலும் விதிக்கப்படும் வரிகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப ஆப்பிள் போனின் விலையில் மிகப்பெரிய அளவில் மாறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விலைப்பட்டியலின்படி, துருக்கி நாட்டில் ஐபோன் 17 ப்ரோ (256ஜிபி) விலை இந்திய மதிப்பில் சுமார் 2,47,000 ரூபாயாக (2,592 டாலர்) நிர்ணயிக்கப்பட்டு உலகிலேயே மிக உயர்ந்த விலைக் கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் 2,15,000 ரூபாய்க்கும், எகிப்து நாட்டில் 1,78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது ஆப்பிள் பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதே சமயம், அமெரிக்காவில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1,12,000 ரூபாயாகக் (1,181 டாலர்) குறைந்து காணப்படுகிறது. மேலும், சீனாவில் 1,27,000 ரூபாய்க்கும், சிங்கப்பூரில் 1,30,000 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், இந்தியாவில் இதன் விலை சுமார் 1,36,000 ரூபாயாகப் (1,427 டாலர்) பட்டியலிடப்பட்டு 24-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.