சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டபோது, கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயிலில் இருந்து ஒருவர் குழந்தையை இறக்கி விட்டு சென்றதாக பதிவாகியிருந்தது. இதனால் குழந்தையை யாராவது கடத்தி வந்து ரயிலில் இறக்கி விட்டார்களா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>