இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமிருந்து மொபைல் போன் மற்றும் நகைகளைப் பறித்துச் செல்லும் திருட்டுச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், திருடனின் திட்டம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு திருடனை, ரயிலுக்குள் இருந்த பயணிகள் சாமர்த்தியமாக கையைப் பிடித்துக் கச்சிதமாக லாக் செய்துள்ளனர். தப்பிக்க வழியில்லாமல் அந்தத் திருடன் ரயிலின் வெளிப்புறத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ट्रैन में mobile चोरी करना कभी कभी कितना भाड़ी
पर जाता है इस video क़ो देखकर अंदाजा लगा सकते है…आजकल ट्रैन में चोरी का ममला बहुत बढ़ गया है…
खिड़की क़े पास बैठने वाले लोग क़ो सतर्क रहना चाहिये… pic.twitter.com/mLlqG7ZDx0
— Manish Yadav (@ManishY71326383) July 18, 2026
“>
இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாகப் புறப்படத் தொடங்கியபோது, தண்டவாளத்தின் அருகில் நின்றிருந்த ஒரு திருடன் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பயணியின் கையில் இருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளான். ஆனால், அந்தப் பயணியும் அவருடன் இருந்த மற்ற பயணிகளும் நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, திருடனின் கைகளை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே இழுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர்.
இதனால் ரயிலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், பிடியை விட்டால் கீழே விழுந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற பயத்தில், அந்தத் திருடன் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கியபடி கெஞ்சத் தொடங்கினான். சுமார் சில கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அந்தத் திருடன் ரயிலின் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி, காற்றில் தொங்கியபடியே அழுதுகொண்டே பயணித்துள்ளான். “தயவுசெய்து கையை விட்டுவிடாதீர்கள், என் கை உடைந்துவிடும், நான் செத்துவிடுவேன்” என்று அவன் பயணிகளிடம் மரண பயத்தில் கதறும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இறுதியாக, அடுத்த ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் அவனது கையை விட்டு, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த அதிரடியான மற்றும் ஆபத்தான வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருவதோடு, “தவறு செய்தால் தண்டனை உடனடியாகக் கிடைக்கும்” என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
