மாதம் 38,000 ரூபாய் சம்பளம் தரும் நிலையான வேலையைத் துறந்து, தேநீர் கடை ஒன்றைத் தொடங்கிய நபர் ஒருவர், தற்போது அனைத்து செலவுகளும் போக மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வரும் ஆச்சரியமான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிபார்மன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தேநீர் கடையைத் தொடங்கினார்.

இந்த முடிவைச் சுற்றியிருந்தவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது திட்டமிடலால் அவர் இன்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

தினசரி சுமார் 400 கோப்பைகள் தேநீர் விற்பனை செய்வதன் மூலம் அவருக்கு மாதம் 1.8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வாடகை, பணியாளர் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் மின்சாரக் கட்டணம் என அனைத்துச் செலவுகளையும் கழித்த பிறகும், அவர் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாயைத் தனது கையில் லாபமாக ஈட்டுகிறார்.

தற்போது தனது தேநீர் கடையை விரிவுபடுத்தி, வடா பாவ், சமோசா மற்றும் ஜிலேபி எனப் பலகாரங்களையும் விற்பனை செய்து வரும் அவர், தனது கடின உழைப்பால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.