ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே நடந்த சம்பவம் ரயில்வே துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் வரும்போதும் தண்டவாளக் கேட் திறந்த நிலையிலேயே இருந்தது. இதைக் கவனித்த ரயில் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தி, கீப் கீப்பரிடம் நேரில் சென்று கேட்டை மூடுமாறு தெரிவித்தார். பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்த இந்த அலட்சியச் செயலால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் உயரதிகாரிகளிடம் சென்றதும், கேட் கீப்பராக பணியாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த ஜெயசிங் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அவர் பணியிட நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“>