திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி அருகே இன்று அதிகாலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக வந்த கார் மோதியது. இந்த தாக்கம் மிகுந்ததால் காரில் இருந்தவர்கள் கடுமையாக காயமடைந்தனர்.

காரில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பயணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவிய நிலையில், எளாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.