சமூக வலைதளங்களில் ஒரு சிசிடிவி காட்சி இப்போது அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் பெண் ஊழியர், பில் போடும் கவுண்டரில் மிகவும் அசதியாக அமர்ந்தபடியே ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். அப்போது அங்கே வந்த ஒரு வாடிக்கையாளர், அந்தப் பெண் தூங்குவதைப் பார்த்துவிட்டு அவரை எழுப்ப விரும்பவில்லை. ஆனால், மேஜையில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெளிப்படையாக இருந்த பணத்தைக் கண்ட அந்த நபர், யாராவது திருடி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பணத்தை எடுத்து அங்கிருந்த பூ ஜாடிக்கு அடியில் பாதுகாப்பாக மறைத்து வைத்தார்.

​அதன் பிறகு, தனக்குத் தேவையான பொருளை மட்டும் எடுத்துக் கொண்ட அவர், அதற்கான சரியான தொகையை மேஜையில் வைத்துவிட்டு, தான் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை அங்கிருந்த கேமராவைக் நோக்கி காட்டிவிட்டு அமைதியாகச் சென்றார். அந்தப் பெண் ஊழியரின் தூக்கத்தைக் கலைக்காமல், அதே சமயம் கடையின் பணத்தையும் பாதுகாத்த அந்த நபரின் நேர்மையைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். “இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என அந்த நபருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.