மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்து  அனுமன் கோயிலில் இன்று சனிக்கிழமை மதியம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் சுமார் 3.30 மணியளவில் கோயிலின் ‘சபா மண்டபத்தின்’ (வெளிப்புற அரங்கம்) மேல்தள ஸ்லாப் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியதுடன், இடிபாடுகளுக்குள் சுமார் 30 முதல் 40 பக்தர்கள் வரை சிக்கியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தின் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

சம்பவ இடத்திற்கு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டன. மேலும் இந்த விபத்தில் தற்போது ஐந்து பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 40 பேர் உள்ளே சிக்கி இருப்பதால் அவர்களின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.