சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் சிக்கன் கால்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாய் ஒருவருக்கு, எதிர்பாராத விதமாக அது உணவுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சிக்கன் கால் தொண்டையில் சிக்கிக்கொண்டதால், அதை வெளியே எடுக்கவும் முடியாமல், உள்ளே தள்ளவும் முடியாமல் அந்தத் தாய் உயிருக்குப் போராடியுள்ளார். அந்த இக்கட்டான நேரத்தில் வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள், பதற்றமடையாமல் துரிதமாகச் செயல்பட்டுள்ளார்.
பள்ளியில் கற்றுக் கொண்ட ‘ஹெய்ம்லிக் மேனுவர்’ (Heimlich Maneuver) எனும் முதலுதவி முறையைத் தனது தாய்க்கு உடனடியாகச் செய்துள்ளார். சிறுமியின் இந்தச் சாமர்த்தியமான செயலால் சிக்கன் கால் தொண்டையிலிருந்து வெளியே வர, அந்தத் தாய் நூலிழையில் உயிர் பிழைத்தார்.
中国广东省,一位母亲被鸡脚堵住气管,鸡脚出不来下不去,还呼吸不了,情况危机!幸好孩子在家,孩子虽然有被吓到,但没有惊慌失措,二女儿用海姆立克急救法对母亲急救,母亲缓了过来! pic.twitter.com/dzUgnxFfzk
— 夏一旦同学 (@Danyixia) April 22, 2026
“>
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபத்தான நேரத்தில் பயப்படாமல் தனது தாயைக் காப்பாற்றிய அந்தச் சிறுமிக்குத் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதலுதவி குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு ஒரு உயிரைக் காக்க உதவும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
