நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கில் கண்டு ரசித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், படம் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது உற்சமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். படம் குறித்த அவரது பாராட்டுக்களும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘ஜனநாயகன்’ படம் தமக்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும், திரையரங்கில் அமர்ந்து பார்த்தபோது மனதுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். விஜய் சினிமா திரையைத் தாண்டி எப்போதுமே மக்களுக்காகச் பல நற்காரியங்களைச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த், தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியில் இருந்து கொண்டு மக்களுக்கு மேலும் பல சிறப்பான சேவைகளைச் செய்வார் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“நாம் எப்போதுமே நல்லதே செய்தால், வெற்றி நம்மைத் தேடிப் பின்னால் ஓடிவரும்; எதையும் நாம் பின்னால் சென்று தேடத் தேவையில்லை” என்ற தத்துவத்தை முன்வைத்து விஜய்யை அவர் மனதாரப் பாராட்டினார். சினிமாவில் எப்படிச் சாதனைகளைப் படைத்தாரோ, அதேபோல் அரசியலிலும் மக்களின் நலனுக்காகச் சிறந்த மற்றும் உறுதியான முடிவுகளை அவர் எடுப்பார் என்றும், அவரது நற்பணிகள் எப்போதும் தொடரும் என்றும் ஸ்ரீகாந்த் உறுதியளித்தார்.
“Thalaivaa, You Are Great!” – Srikanth After Watching ‘JanaNayagan’🤍🔥 pic.twitter.com/dcbXYs0EQD
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) July 25, 2026
“>
திரைப்பட உலகைக் கலக்கிய விஜய், தற்போது அரசியல் களத்திலும் தனது மக்கள் சேவையால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்த இந்த வாழ்த்துச் செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
