இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Resort), இந்தியக் குடும்பம் ஒன்று செய்த காரியம் இப்போது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் தங்கியிருந்த அந்தக் குடும்பம், ஏப்ரல் 19-ம் தேதி ஹோட்டலை விட்டு வெளியேறும்போது (Check-out), அவர்கள் மீது ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களின் உடைமைகளை ஊழியர்கள் சோதனையிட்டபோது, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

​அவர்களது பேப்பிற்குள் ஹோட்டலுக்குச் சொந்தமான டவல்கள், சோப்பு டிஸ்பென்சர்கள், அலங்காரப் பொருட்கள், ஹேர் டிரையர், ஸ்பூன்கள் எனப் பல பொருட்கள் இருந்தன. ஏன், மிதிஅடியைக் (Doormat) கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பதுதான் கொடுமை. கையும் களவுமாகச் சிக்கிய அந்தப் பயணிகள், “பணத்திற்குப் பதிலாகப் பொருட்களைத் தந்துவிடுகிறோம்” என மன்னிப்பு கேட்டனர். ஆனால், ஊழியர்களோ இது பணத்தைப் பற்றியது அல்ல, நேர்மையைப் பற்றியது எனச் சாடினர். இறுதியில் பொருட்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, போலீஸ் புகார் இன்றி சமரசமாக இந்த விவகாரம் முடிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வீடியோ இந்தியர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.