இன்றைய காலகட்டத்தில் நடுத்தரக் குடும்பப் பெண்களின் வாழ்க்கை குடும்பம், குழந்தைகள், வேலை, வீட்டுப் பொறுப்புகள் என்றே சுருங்கி விடுகிறது. இதையெல்லாம் தாண்டித் தங்களுக்கு எனத் தனிப்பட்ட நேரத்தைச் செலவிடப் பெண்களுக்குப் பெரும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனினும், அத்தகையச் சூழலிலும் தங்களின் கலை ஆர்வத்தை விட்டுக்கொடுக்காமல், இல்லத்தரசி ஒருவர் பாலிவுட் பாடலுக்கு ஆடிய நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பிரபலத்தைப் பெறுவதற்காகப் பலர் அநாகரிகமான முறையில் நடனமாடி வரும் தற்போதையச் சூழலில், இந்த இல்லத்தரசியின் நடனம் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகிப் புகழ்பெற்ற “குரு” திரைப்படத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராயின் பாடலுக்கு, இந்தப் பெண் தனது வீட்டின் உள்ளேயே கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு மிக நேர்த்தியாக நடனமாடியுள்ளார். அவரது முகபாவனைகளும் நடன அசைவுகளும் அசல் பாடலை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
