கல்யாண்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூர் பகுதியில், பாஜாக பெண் பிரமுகர் ரிச்சா சுக்லா என்பவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் ஒருவன், வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போதே கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கைலாஷ் விகார் அவாஸ் விகாஸ்-1 பகுதியில் உள்ள அவரது வீட்டின் கேட்டைத் தாண்டி குதித்த திருடன், அசால்ட்டாக பெட்ரூமிற்குள் நுழைந்துள்ளான். குடும்பத்தினர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை சாதகமாக்கிக் கொண்ட அவன், அவர்கள் தலைமாட்டில் இருந்த மொபைல் போனை அலாக்காகத் தூக்கினான். பின்னர், அலமாரியில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டான்.

​இந்த ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவமும் வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்கள் பிரதிநிதியின் வீட்டிற்கே இந்த கதி என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு என்னாவது?” என ரிச்சாவின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.