திருமண விழாக்களில் மணமக்களை விட கேமராமேன்கள் செய்யும் லூட்டிகள் தான் தற்போதைய சமூக வலைதளங்களின் ட்ரெண்டிங் கன்டென்ட். அந்த வகையில், திருமண மேடையில் தனக்கு குறுக்கே நின்று ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் செல்போனை, ஆத்திரமடைந்த கேமராமேன் பறித்து காற்றில் தூக்கி வீசிய விசித்திர வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், திருமண மேடை அழகாக அலங்கரிக்கப்பட்டு மணமக்கள் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அங்கிருந்த கேமராமேன் மணமக்களை மிகத் துல்லியமாக படம் பிடிப்பதில் மும்முரமாக இருந்தார். அதே நேரத்தில், மணமக்களின் உறவினர் பெண் ஒருவருக்குள் இருந்த ‘போட்டோகிராபர்’ ஆர்வம் திடீரென எட்டிப்பார்த்துள்ளது. அவரும் மணமக்களை படம் பிடிக்கத் தனது ஸ்மார்ட்போனுடன் மெதுவாக மேடைக்கு முன்னேறி வந்து, கேமராமேனுக்கு மிக அருகில், அவரது கோணத்தை மறைக்கும்படி குறுக்கே வந்து நின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by The India Rx | Devraj Nareti (@theindiarx.in)

மணமக்களை ஒரு சிறந்த ஆங்கிளில் படம் பிடிக்க கேமராமேன் முன்னேறியபோது, அந்தப் பெண் குறுக்கே நின்றதால் அவர் கடும் எரிச்சலடைந்தார். நொடிப் பொழுதில், மணமக்களை படம் பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கையில் இருந்த செல்போனைப் பறித்த கேமராமேன், அதை அப்படியே காற்றில் தூர எறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து நிற்க, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கோபப்படுவதற்குப் பதிலாக, இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்து அரங்கமே அதிரும்படி சிரிக்கத் தொடங்கினர்.

மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தன் வேலையில் கவனம் சிதறக் கூடாது என்பதில் கேமராமேன் தெளிவாக இருக்கிறார்” என்றும், “மணமக்களின் போட்டோ எப்படி வந்ததோ தெரியாது, ஆனால் ஆன்ட்டியின் போன் ஷாட் பர்பெக்டாக விழுந்துவிட்டது” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.