புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின் சேவை குறைபாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவாக 3,000 ரூபாயும் வழங்க ஹோட்டல் நிர்வாகத்திற்கு நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
இதுமட்டுமின்றி, ஒரு விசித்திரமான தண்டனையாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தலா 2 பிளேட் வீதம், தொடர்ந்து 5 வாரங்களுக்கு மொத்தம் 10 பிளேட் பிரியாணியை அந்த வாடிக்கையாளருக்கு முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
