இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வைரல் ரீல்ஸ் செய்வதற்காக மக்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வினோதமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்பொழுது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை தலைமுடி பிதுங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், விவசாயத்திற்காகத் தண்ணீர் பாய்ச்சி நிரப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சேற்று வயலில், இளம் பெண் ஒருவர் மொத்தமாகப் படுத்துக்கொண்டு, அப்படியே நாகினி பாம்பு போல நெளிந்து நெளிந்து ‘நாகின் டான்ஸ்’ ஆடி ரீல்ஸ் செய்துள்ளார்.
லைக்குகளுக்காகவும், வியூஸ்களுக்காகவும் அந்தப் பெண் சேற்றில் உருண்டு பிரண்டு செய்த இந்த வினோத நடிப்பு தற்பொழுது இணையத்தில் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ் தளத்தில் @KUNDAN00PATEL என்ற அக்கவுண்ட்டில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துத் தங்களது கமெண்ட்டுகளைப் பறக்கவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “இந்தக் கொடுரமான நாகினியைப் பார்த்ததும் உலகத்தில் இருக்கிற அத்தனை ஆண் பாம்புகளும் பயந்து ஓடி ஒளிஞ்சிருக்கும்” என்று கிண்டலடித்துள்ளார்.
आज लेकर ही जाएगी..👀
आज नागमणि लेकर जाएगी या छोड़ कर जाएगी कोई है जो
इस इस तड़पती आत्मा को शान्ति देने की हिम्मत करेगा..😝 pic.twitter.com/uAlGta0oaq— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) June 9, 2026
மற்றொருவரோ, “இவங்களுக்கு இன்னும் நாக்குமணி கிடைக்கல போல, அதான் சேத்துல தேடுறாங்க” என்றும், “வெயில் மண்டையில ஏறுனா இப்படித்தான் ஆகும்” என்றும் ஆளாளுக்குப் பங்கமாக ட்ரோல் செய்து கமெண்ட் பாக்ஸைக் கழுவி ஊற்றி வருகின்றனர். பாராட்டுக்களைப் பெறாவிட்டாலும், நெட்டிசன்களின் ஏகப்பட்ட நக்கல் கமெண்ட்டுகளுடன் இந்த ‘சேற்று நாகினி’ வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
