“இந்நேரம் மட்டும் தி.மு.க ஜெயிச்சிருந்தா என்னென்ன  பண்ணியிருப்பாங்க தெரியுமா.. அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க, இன்னைக்கு ஒரு மன்னராட்சி மாதிரி தங்க நாற்காலியையே தயார் பண்ணி வச்சிருப்பாங்க!”

என்று தமிழக அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா திமுகவை நோக்கி எகிறியடித்துள்ள விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையிலும், தங்களின் தலைவர் விஜய் ஒரு வெற்றிக் கொண்டாட்ட விழாவைக் கூட நடத்த அனுமதிக்கவில்லை என்றும், தங்களுக்கு இப்போது மக்களுக்கு வேலை செய்வதற்கு மட்டுமே நேரம் இருக்கிறதே தவிர, கொண்டாடுவதற்கு நேரமில்லை என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் திமுகவினர் காட்டிய ஆடம்பர அரசியலையும், அதிகாரத் தோரணையையும் மிகக் கடுமையாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, அரியணையில் அமர்ந்ததும் தவெகவின் மக்கள் பணி தொடங்கிவிட்டதாகக் முழங்கியதுடன், திமுகவின் குடும்ப அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டியுள்ளதாகக் கூறி அறிவாலய வட்டாரத்தை நிலைகுலைய வைத்துள்ளார்.

“>