காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்ததாக கூறப்படும் சிலர் பள்ளி வளாகத்திற்கு நுழைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை அங்கு மாட்டி வைத்த ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்திற்கு தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொந்தளித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.