முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள பொன்ராஜ், ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு. “ஒன்றும் தெரியாத ஒருவரை முதலமைச்சராக ஆக்கிவிட்டீர்கள். அவர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார், சினிமா நடிகர்களைப் பார்ப்பார். அதைத்தவிர என்ன செய்ய முடியும்?. எழுதிக் கொடுத்ததை மட்டும் படிப்பார்” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொன்ராஜின் இந்த நேரடி அரசியல் தாக்குதல், சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் முன்னதாக பொன்ராஜ் தமிழக பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில் நேரடியாக விஜயே அவர் மீது புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பிறகு பொன்ராஜ் மீது இரு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.