எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது நடவடிக்கைகளுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மனதில் நினைத்ததை செய்து வருகிறார்.

மேலும், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.