சவால்கள் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பார்கள், ஆனால் அதே சவால்களைத் தனது பலமாக மாற்றிக்கொண்ட ஒரு பெண்ணின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தை வழிநடத்த வேறு வழியின்றி அவர் தந்தை பயன்படுத்திய பைக்கையே தனது வாழ்வாதாரமாக மாற்றியுள்ளார் இந்தப் பெண்.

ஒரு பயணி இவரிடம் “உங்களால் பைக்கை ஓட்ட முடியுமா?” என்று கேட்டபோது, “நான் ஒன்றரை வருடமாக இதைத்தான் செய்கிறேன், உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் பயணத்தை ரத்து செய்யுங்கள்” என்று அவர் காட்டிய தன்னம்பிக்கை பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தன்னுடைய தந்தை ஒரு பைக் டாக்ஸி ஓட்டுநராக இருந்தவர் என்றும், அவர் விட்டுச் சென்ற அதே பைக்கில் தற்போது தான் பணியாற்றி வருவதாகவும் அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

சோகத்தில் மூழ்கிவிடாமல், தந்தையின் அடையாளத்தையே தனது தொழிலாக மாற்றிக்கொண்ட இவரது தைரியத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல” என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த ‘நிஜ வாழ்க்கை நாயகிக்கு’ உதவி செய்ய முன்வருவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.