தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் இன்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான N.ஆனந்த் முன்னிலையில் அவர் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து இடதுசாரி கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டவர் சி.மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது இடதுசாரி இயக்கத்தின் மூத்த சித்தாந்தவாதியும் தலைவருமான சி.மகேந்திரன் தவெக-வில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
