டெல்லியின் முக்கிய வணிகப்பகுதியான சாக்கேட்டில் உள்ள ‘சாத்விக்’ என்ற பிரபல சைவ உணவகத்தில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரின் கைப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள டி.எல்.எப் (DLF) மாலில் தோழிகளுடன் உணவருந்திக் கொண்டிருந்த ஒரு பெண், தனது பையை அருகில் இருந்த காலி நாற்காலியில் வைத்திருந்தார்.

Theft in DLF saket
byu/These_Writer_9506 inNewDelhi

அப்போது பக்கத்து மேஜையில் அமர்ந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த நபர், செல்போனில் பேசுவது போல பாசாங்கு செய்து கொண்டு, மிக லாவகமாக அந்தப் பையைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. சுமார் இரண்டரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், அந்தத் திருடன் எந்தவித பதற்றமும் இன்றி பையைத் திருடிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.