பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தனக்கே சொந்தம் என்றும், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் சீனா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த நிலப்பரப்பு தங்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
<a href="http://

“>
இந்தியாவின் எதிர்ப்பை நிராகரித்துள்ள சீனா, இது தனது சொந்த நிலப்பரப்பு என்றும், இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும்திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே 1963-ல் போடப்பட்ட எல்லை ஒப்பந்தத்தையே இந்தியா சட்டவிரோதமானது என்று கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய நிலப்பரப்பு வழியாகச் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எல்லையில் தற்போதைய நிலையை மாற்றச் சீனா முயல்வதை இந்தியா தொடர்ந்துஎதிர்க்கும் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.