மும்பையில் நள்ளிரவில் வழிதெரியாமல் தவித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியை, ரேபிடோ பைக் ஓட்டுநர் சிந்து குமாரி பாதுகாப்பாக விடுதியில் சேர்த்து மனிதாபிமானத்தை நிலைநாட்டியுள்ளார். மும்பை கடற்கரை பகுதியில் உலா சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர், வழிதவறி நள்ளிரவு 10 மணியளவில் கொலாபா பகுதியில் திணறியுள்ளார். செல்போன் சிக்னல் கிடைக்காமலும், கூகுள் மேப் வேலை செய்யாததாலும் செய்வதறியாது அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ‘ரேபிடோ’ பெண் ஓட்டுநர் சிந்து குமாரி, அப்பெண்ணின் நிலையை அறிந்து உடனடியாக உதவ முன்வந்தார்.
मुंबई में एक विदेशी टूरिस्ट बीच पर टहलते टहलते बहुत दूर कोलाबा बीच तक पहुंच गई और वापसी में अपना रास्ता भूल गई
उसके फोन में नेट नहीं चल रहा था गूगल भी नहीं चल रहा था
रात को 10:00 बजे वह मुंबई में कोलाबा में रो रही थी
तभी वहां से एक रैपीडो बाइकर सिंधु कुमारी गुजर रही थी… pic.twitter.com/D5R7C0N5gM
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) January 12, 2026
‘ஹோட்டல் கோக்கனட்’ என்ற தனது தங்கும் விடுதிக்கு செல்ல முடியாமல் தவித்த அந்த பயணியை, தனது பைக்கில் ஏற்றிச் சென்று பத்திரமாக விடுதியில் ஒப்படைத்தார். ஆபத்தான சூழலில் துணிச்சலுடன் செயல்பட்டு உதவி செய்த சிந்து குமாரியின் இந்த மனிதாபிமான செயலை விடுதி ஊழியர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். “உதவி செய்ய பெரிய அங்கீகாரம் தேவையில்லை, நல்ல மனமே போதும்” என நிரூபித்துள்ள சிந்துவின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
