இன்ஃப்ளூயன்சர் வில்லியம் ரோசி (William Rossy) நடத்திய நேர்காணல் வீடியோ ஒன்றில், 63 வயதான கே.எஃப் சீடோ (KF Seetoh) என்ற முதியவர் தனது 30 ஆண்டுகால குழந்தை இல்லாத திருமண வாழ்க்கை குறித்தும், “குழந்தை பெற்றுக் கொள்வது என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது கிடையாது” என்று உடைத்துப் பேசியுள்ள அதிரடிப் பார்வை தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது.

பொதுவாகத் திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லிப் பெற்றோர்களும், உறவினர்களும் கொடுக்கும் சமூக நெரிசல்களுக்கு மத்தியில், குழந்தை வளர்ப்பில் இருக்கும் இமாலயப் பொறுப்புகள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்துப் பேசியுள்ள சீடோ, இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்களே தவிர, வாழ்க்கையின் எதார்த்தமான சவால்களையோ, அடுத்தவர்களை மதிக்கும் ஒழுக்கத்தையோ சொல்லித் தருவதில்லை என்று கறாராகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by William Rossy (@sprouht)

“நான் எனக்குக் கிடைக்காததை என் பிள்ளைக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு பிள்ளைகளைக் கெடுக்கும் தற்போதைய சூழலில், தான் ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடியுமா என்ற சுயசிந்தனையோடுதான் தானும் தனது மனைவியும் 30 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் வாழும் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்ததாக அவர் ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார்.

மேலும், தனது 30 ஆண்டுகால வெற்றிகரமான காதல் வாழ்க்கையின் ரகசியத்தைக் பகிர்ந்த அவர், உண்மையான காதல் என்பது வெறும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் இல்லை; தங்களது துணையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மனதாரச் சிரிக்க வைப்பதிலும், ஒருவருக்கொருவர் எந்நாளும் உண்மையான நண்பனாக இருந்து பரஸ்பரம் கவனித்துக் கொள்வதிலும்தான் இருக்கிறது என்று நச்சுன்னு விளக்கியுள்ளார்.

ஆசியக் குடும்பப் பின்னணியில் இருந்து கொண்டு இந்த முதியவர் பேசியுள்ள இந்த அசாத்தியமான முற்போக்குக் கருத்து தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி, “நூற்றுக்கு நூறு உண்மை பாஸ்.. தகுதி இல்லாதவங்க குழந்தை பெத்து அவங்களுக்கு ட்ராமாவைக் கொடுக்குறதை விட, இவரோட தெளிவான சிந்தனை நிஜமாவே வேற லெவல்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டு மழையை அள்ளி இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.