அப்பா கீழே விழுந்தப்போ அந்தப் புள்ளை பயந்துபோய் அழுதுடுமோன்னு நெனைச்சோம் , ஆனா அவர் சிரிச்ச உடனே அதுவும் ஹா ஹான்னு சிரிச்ச சிரிப்பு இருக்கேப்பா!”
– என்று இணையவாசி ஒருவர் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள நிலையில், தந்தை கீழே விழுந்ததைப் பார்த்த குழந்தை ஒன்று, அவரே முதலில் சிரிக்கும் வரை காத்திருந்து அதன் பின் தானும் அழகாகச் சிரிக்கும் பேரன்பு கலந்த மனதை உருக்கும் விசித்திர வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது.
அந்தப் பதிவில், தந்தை நாற்காலியில் உட்கார முயலும் போது அது எதிர்பாராதவிதமாக நகர்ந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுகிறார்; அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, தந்தை காயமடைந்து விட்டாரோ என்ற பயத்தில் முதலில் சிரிக்காமல் அமைதியாகவே பார்க்கிறது.
ஆனால், தந்தை சட்டென்று எழுந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்து வலியைப் பொருட்படுத்தாமல் குழந்தையை நோக்கிப் புன்னகைத்த அடுத்த கணமே, அந்த மழலை பயம் நீங்கித் தன் தந்தையை வாரி அணைப்பது போல அழகாகச் சிரிக்கத் தொடங்கும் அந்த அதீத நேர்மறையான காட்சி, “உலகிலேயே ஆகச்சிறந்த அன்பு இதுதான்” என இணையத்தில் தற்பொழுது மெகா வைரலாகி அனைவரையும் உருக வைத்துள்ளது.
Babasının yere düşmesine gülmek için önce babasının gülmesini beklemesi aşırı pozitif bir video )) pic.twitter.com/iki610elhH
— 𝗔𝗬𝗕𝗘𝗡İ𝗭🇹🇷 (@ve21ev) June 17, 2026
“>
