உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் மவானா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 22 வயதுடைய முஸ்கான் என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளான மிர்ஹா ஆகியோருக்குக் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு, தானும் அதை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் கடந்த ஒரு வாரமாக துணிக்கடை நடத்தி வரும் இவரது கணவர் பைசானுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் நிலவி வந்ததே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் நடந்த உடனே, குடும்பத்தினர் மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மீரட் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்ததால் தற்போது மூவரும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி, நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனைக்குச் சென்று பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
