தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரம்யா மாட்டு கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.