அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை கொடுக்க இயலாததால் மன உளைச்சலில் இருந்த வனிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.