இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் ஒரு குழந்தை ஒன்று சாலையில் சைக்கிளில் செல்கிறது. அப்போது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென இறங்கி சென்று குழந்தையிடம் சைக்கிளை பறிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த சில குழந்தைகள் ஒன்று சேர்ந்து சைக்கிளில் இருந்து இறங்கி வாலிபரை பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர்.

 

இதில் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.