இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Bull attacks on a Street Vendor💀
pic.twitter.com/LOBlldfTDm— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 22, 2025
அதாவது அந்த வீடியோவில் ஒருவர் தள்ளு வண்டியில் பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அங்கு வந்த காளைமாடு ஒன்று தள்ளு வண்டியின் மீது ஏறி இறங்கி அங்கிருந்து ஓடியது. இதில் அந்த தள்ளுவண்டி முற்றிலும் உடைந்து சேதமானது.
இதனால் அங்கு இருந்தவர்கள் பதறி அடித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
