செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நீங்க கூட ஒரு பத்து பேர் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம். அது மாறுபட்ட கருத்து அல்ல. அரசியலில் என்பது ஒரு பெருங்கடல். ஒரு சமுத்திரம். அந்தப் பெருங்கடல்,  சமுத்திரத்தில் நீந்தி கரை சேருபவர்களும் உண்டு. மூழ்கி போறவர்களும் உண்டு. எனவே பாப்போம்…  இன்னைக்கு கட்சி ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு நீந்தி கரை சேருகிறாரா ?  இல்லை மூழ்கி போறாரா ? என்பதை தேர்தலில் நின்னு மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் தீர்மானிக்கின்ற விஷயம். அதனால கட்சியை பொறுத்தவரை யாரும் ஆரம்பிக்கலாம்.

நடிகர் விஜய் சொன்ன ஸ்டேட்மெண்ட் படி பார்த்தால் இரண்டு கட்சிக்கு தான் சரியா பொருந்தும். ஒன்று திமுகவுக்கு பொருந்தும்.  இன்னொன்னு பிஜேபிக்கு பொருந்தும். இது கூட உங்களுக்கு தெரியலையா உங்களுக்கு…. நாங்க ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அதே நேரத்துல பாத்தீங்கன்னா…. பொய் வழக்கு,  ஊழல் வழக்கு போடுவாங்க.

எல்லாத்தையுமே நீதிமன்றத்தில் சந்தித்து,  அதன் அடிப்படையில் நிரபராதின்னு சொல்லிட்டு,  எல்லா விதமான அளவுக்கு நான் நடவடிக்கைகள் இருக்கிறது. விஜய்  எங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் எங்கள் கட்சியை பற்றி  குறிப்பிட்டு சொன்னால்,  அதற்குரிய பதிலடியை நிச்சயமாக  நாங்கள் கொடுப்போம். நாங்கள் திமுக பிஜேபி தான் அவர் தாக்கினார் திமுக தான் ஊழல்ல. திமுக – பிஜேபியை தான் விஜய் சொல்லி உள்ளார்.