செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்லாம்… அதே மாதிரி தொடரக்கூடாது. இதெல்லாம் ஒரு நீதி.  வழக்கு, அரசியல், அமலாக்கதுறை, வருமானம் இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே….  இதுல என்ன நியாயம் இருக்கு ?  விவசாயி ரெண்டு பேரு அவ வங்கி கணக்குல 500 ரூபாய்  வைத்திருக்கிறான்.   அவன் ஏதோ காட்டு மாட்டை  வேட்டையாடி சாப்பிட்டேன் என்று…..  அது எப்பவோ உள்ள வழக்கு. அதுல அவர்களுக்கு விடுதலை ஆயிடுச்சு.

அமலாக்கத்துறை  அவனுக்கு சமன் அனுப்பி விசாரிக்கிறது என்றால்,  இது வேலை என்ன ? ஆக்கிரமிச்சான் அவனுடைய நிலத்தை பிஜேபி ஒன்றிய செயலாளர். மாவட்ட செயலாளர் அவன்  வேற ஆளு. அவன்  மேல நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அப்பாவி இரண்டு விவசாயி மேல  நடவடிக்கை எடுக்கிறது,  விசாரணைக்கிறது எப்படின்னா…. இங்கே என்ன இருக்குது ?  அரசியலில் எல்லாமே அவரவர் வசதிக்கேற்ப பலி வாங்கல்.

நாம நினைச்சுட்டு இருக்கோம்… இந்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை,   வருமானவரித்துறை, சிபிஐ இவங்க எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனித்த அதிகாரம் பெற்ற அமைப்பு. அரசியல் தலையீடோ, ஆட்சி தலையிடோ  இருக்காது அப்படின்னு….  இப்ப ஆட்சியாளர்களின் ஐந்து விரல்கள் போல இருக்கு.  நீட்டினால்  நீட்டும்,  மடக்குனால் மடங்கும் என தெரிவித்தார்.