துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  ED பற்றி சொன்னீர்கள்…  சாதாரணமாக இரண்டாவது சாமானில் அரெஸ்ட் பண்ணி விடுவார்கள்.  அரசியல்வாதியாக இருந்து,  பதவியில் இருந்தால் பண்ண முடியாது.  சட்டம் அரசியல்வாதிக்கு இருக்க கூடாது.  சட்டமே எப்பொழுது அரசியல்வாதியை  நெருங்குகிறதோ,  அப்போ  அவருக்கு கால்புணர்ச்சியால் செய்கிறார்கள் என்று சொல்வார்கள்.

கால்புணர்ச்சிக்கும்  இதற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனாலும் இன்றைக்கு இந்தி கூட்டணி எதற்காக அமைத்திருக்கிறார்கள் ? என்றால்,  பாஜகவிற்கு எதிராக இல்லை.  ED-க்கு எதிராக தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ED  ரொம்ப கேர் ஃபுல்லாக தான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பற்றி கேட்டார்கள்… எடப்பாடி பொருத்தவரை அவர் என்னால புரிந்து கொள்ள முடியவில்லை.  திமுக எதிர்ப்பு என்பது அவருக்கு முக்கியமாக  இல்லை.  எது அதிமுகவின் ஆத்மாவோ, எது அதிமுகவுக்கு பலத்தை கொடுக்கின்றதோ, எது அதிமுகவுக்கு பெருமளவிற்கு அரசியல் நாட்டம் இல்லாதவர்களுடைய ஆதரவை கொடுக்கின்றதோ, வாக்குகளை கொடுக்கின்றதோ, அந்த திமுக எதிர்ப்பை அவர் கைவிட்டது அதிமுகவிற்கு பெரிய பலவீனமாக மாறும் என்பது தான் எங்களுடைய அபிப்பிராயம்.

இவர் போய் தொப்பி போட்டு கொள்வதற்க்காக்…  விபூதியை அழித்துவிட்டு, SDPI மாநாட்டிற்கு போவதால் முஸ்லிம்கள் அவருக்கு வாக்கு கொடுப்பார்கள் என்று தோணவில்லை எனக்கு… முஸ்லிம்களை மோடிக்கு எதிராக திருப்பி வைத்திருக்கிறது திமுக… அவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்பது எனது மனதில் இருக்கிறது. அதிமுக பிளவுபடுமா என்பதை பற்றி நான் சொல்லத் தயார் இல்லை. ஆனால் இந்த தேர்தலில் ஒரு பெரிய அடி அதிமுகவுக்கு வந்தது, என்று சொன்னால் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.