நாட்டில் பெண்கள் வட்டி இல்லா கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அந்த கடனில் 50 சதவீதம் வரையிலான கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள வங்கிகளை அணுகவும்.