தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரிகமான கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் நயினார் நாகேந்திரனின் பேச்சு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பொதுவாகப் பண்பாகப் பேசக்கூடியவர், அவர் ஏன் இப்படிப் பேசினார் என்று தெரியவில்லை எனக் கூறி, பாஜக உட்கட்சியிலேயே அதிருப்தி நிலவுவதை வானதி உறுதிப்படுத்தியுள்ளார். விஜய்க்கு ஆதரவாகக் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு அலை, நயினார் நாகேந்திரனைப் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
