துருக்கி நாட்டின் ஒரு பகுதியில், ஓட்டுநர் இல்லாமல் சரிவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக உருண்டு வந்த பிக்கப் டிரக் ஒன்றை, மெசுத் பாகிசி என்ற ரொட்டி வியாபாரி தனது உயிரைப் பணையம் வைத்துச் சாதுரியமாக நிறுத்திப் பெரும் விபத்தைத் தடுத்துள்ள சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மளிகைக் கடை ஒன்றிற்கு ரொட்டி விநியோகம் செய்து விட்டு வெளியே வந்த மெசுத் பாகிசி, ஹேண்ட் பிரேக் போடப்படாததால் லாரி ஒன்று தங்களை நோக்கி அதிவேகமாக உருண்டு வருவதைக் கவனித்துள்ளார்.
வாகனத்தின் கதவு திறந்திருந்த நிலையில், உள்ளே யாரும் இல்லை என்பதை உணர்ந்த அவர், ஒரு நொடி தயங்கினாலும் உடனடியாக ஓடிச் சென்று ஓட்டுநர் இருக்கையில் குதித்து பிரேக் அடித்து அந்த டிரக்கை அதிரடியாக நிறுத்தினார்.
இந்த விபத்தில் அங்கிருந்த ஒரு வாகனம் மட்டும் லேசான சேதமடைந்த நிலையில், “அந்தச் சமயத்தில் குழந்தைகள் பலரும் மிதிவண்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
Ankara’da el freni inik halde bırakılan kamyonetin yokuş aşağı kaydığını gören fırıncı, aracı böyle durdurdu. pic.twitter.com/QChxrdNe0o
— TRT HABER (@trthaber) June 19, 2026
“>
நான் தலையிடாவிட்டால் பெரும் துயரம் நேரிட்டிருக்கும், மக்கள் அனைவரும் என்னை அன்றைய கதாநாயகனாகக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள பாகிசியின் இந்தச் சமயோசித வீரச் செயலுக்குத் தற்பொழுது இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகின்றன.
