ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்களாகத் தனது கடின உழைப்பையும் உண்மையான விசுவாசத்தையும் வழங்கி வந்த ஊழியர் ஒருவரை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த நிறுவனம் திடீரென வேலையிலிருந்து நீக்கிய அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிறுவனத்தின் இந்தத் துரோகத்தால் நிலைகுலைந்து போகாமல், அடுத்த நாளே அவர் எடுத்த அதிரடி முயற்சி ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. புதிய வேலை தேடும் முயற்சியில் இறங்கிய அவருக்கு, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு முன்னணி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அதிர்ஷ்டம் கதவைத் தட்டுவது போல, முந்தைய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு  அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அவருக்குக் கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி, போக்குவரத்துச் செலவுகளும் அலைச்சலும் இல்லாத, பலரும் விரும்பும் அதாவது வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதியையும் அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. விசுவாசத்திற்கு மதிப்பளிக்காத நிறுவனத்திற்கு, தனது திறமையால் அடுத்த நாளே அவர் கொடுத்த இந்த மாஸ் பதிலடி, வேலை இழப்பால் தவிக்கும் பல இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.