தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், தவெக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி குறித்து அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிகவும் காரசாரமாகப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தேர்தலுக்கு முன்பாகச் செயல்படுத்த முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, இப்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? நிதி இல்லை என்ற காரணத்தைச் சொல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை ஒருபோதும் நிறுத்தக் கூடாது” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.
மேலும் விவசாயிகள் பிரச்சனை குறித்துப் பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவாறு விவசாயிகளின் பயிர் கடன்களை இந்த அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. அதோடு மட்டுமில்லாமல், பயிர் கடன் தள்ளுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள் இடையே பாகுபாடு பார்ப்பது முற்றிலும் தவறான நடைமுறையாகும்” என்று சாடினார்.
அரசு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளைத் தட்டிக்கழிப்பதாக அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில் பேசிய இந்த சாட்டையடி பேச்சு, விவசாயிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
