தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே (தவெக) திரைமறைவில் நடக்கும் ஒரு புதிய அரசியல் நகர்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தனியார் இதழ் ஒன்றில் வெளியான செய்தியின்படி, தற்போதைய திமுக இலக்கிய அணியின் தலைவரான அன்வர் ராஜா, திமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைவதற்காக ரகசியமாகத் தூது அனுப்பி வருவதாகக் கூறப்பட்டு, அது சோஷியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் அதிமுக-வின் முக்கிய முகமாக விளங்கி, எம்பி மற்றும் எம்எல்ஏ-வாகப் பதவி வகித்த அன்வர் ராஜா, கடந்த ஆண்டுதான் திமுக-வில் இணைந்தார். இந்நிலையில், அவர் தற்போது தவெக-விற்கு மாறத் தயாராகி வருவதாகவும், ஆனால் சும்மா இணையாமல் தனக்கு மீண்டும் ‘வக்ஃப் வாரியத் தலைவர்’ பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய டிமாண்டை தவெக தலைமைக்கு முன்வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்வர் ராஜா ஏற்கனவே வக்ஃப் வாரியத் தலைவராகச் சில காலம் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது இந்த அதிரடி டிமாண்டிற்குத் தவெக தலைமை இதுவரையிலும் எந்தவொரு ‘கிரீன் சிக்னலும்’ கொடுக்காமல், மௌனம் காத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பிலும் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
