உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரைப் பிடித்து, வாகனப் பதிவு எண் சேதமடைந்தது மற்றும் தலைக்கவசம் அணியாதது ஆகிய காரணங்களுக்காகக் காவல்துறை அதிகாரி ஒருவர் ₹6,000 அபராதம் விதித்த நிலையில், அதற்கு அந்த இளைஞர் கொடுத்த பதிலடி வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இவ்வளவு பெரிய தொகைக்குச் சலான் விதிக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர், தனக்கு அபராதம் விதித்த அதே காவலர் சிறிது நேரத்தில் தனக்கு முன்னால் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்வதைக் கவனித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவன், உடனடியாகத் தனது கைப்பேசியில் வீடியோவைப் பதிவு செய்துகொண்டே அந்தக் காவலரைத் துரத்திச் சென்று வழிமறித்துள்ளான். “சாதாரண மக்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ₹6,000 அபராதம் வசூலிக்கும் நீங்கள், சட்டத்தைக் காக்கும் காவலராக இருந்துகொண்டு எப்படி தலைக்கவசம் இல்லாமல் சாலையில் பயணிக்க முடியும், உங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுமா?” என்று நடுரோட்டில் நேருக்கு நேர் கூர்மையான கேள்விகளை எழுப்பினான்.
<a href=”http://
प्रयागराज में एक युवक का 6000 का चालान काटा था पुलिस वाले ने तो उस युवक ने पुलिस वाले का पीछा कर लिया और पूछा कि आप का हेलमेट कहा है आप का भी चालान कटेगा।
नियम कानून सबके लिए बराबर होते है लेकिन यहां तो बराबर नहीं दिख रहा है क्या यही नियम कानून है। pic.twitter.com/T65kAsLuKu— MANISH KUMAR PATHAK (@Manish_Pandit01) June 18, 2026
“>
இந்த விசித்திர வாக்குவாதம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “சட்டம் என்பது சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, சீருடை அணிந்த அதிகாரியாக இருந்தாலும் சரி,அனைவருக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறி அந்த இளைஞரின் தைரியத்தைப் பாராட்டி நெட்டிசன்கள் தங்களது ஆதரவை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
