மும்பையின் பாரம்பரியமிக்க, சாமானியர்களின் அடையாளமாகத் திகழும் ‘வடா பாவ்’ உணவை, டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தில்  1300 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட உணவு விமர்சகர் ஒருவர், அது மும்பை தாதர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘அசோக் வடா பாவ்’ கடையை விட மிகச் சிறந்த சுவையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய எளிய உணவை, இவ்வளவு அதிக விலைக்கு விற்றதே ‘வடா பாவ்’ உணவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நெட்டிசன்கள் ஒருபுறம் கொதித்தெழுந்து வரும் நிலையில், இந்த உணவு குறித்த விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nikhhiil Chawla (@hmm_nikhil)

டெல்லியின் பிரபல மாலில் உள்ள ஒரு உயர்தர உணவகத்தில் இந்த வடா பாவ் பரிமாறப்பட்டுள்ளது. வழக்கமான தெருவோரக் கடைகளில் விற்கப்படும் வடா பாவ் போலன்றி, மிகவும் ஆடம்பரமாகத் தயாரிக்கப்பட்ட இந்த உணவைச் சுவைத்த அந்த உணவு விமர்சகர், அதன் சுவையைப் பாராட்டி வீடியோ வெளியிட்டார்.

ஆனால், மும்பைவாசிகள் பலரோ, “வடா பாவ் என்பது சாமானியர்களின் உணவு, அதை 1300 ரூபாய்க்கு விற்பதே தவறு; அதிலும் தாதரின் அசோக் வடா பாவோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தங்களது கண்டனங்களையும், காரசாரமான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.