உலகளவில் அதிநவீன வசதிகளுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்ற ஆசிய நாடுகளுள் சிங்கப்பூர் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பல இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கனவு தேசமாக விளங்கும் சிங்கப்பூரில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தகைய பிரம்மாண்டமான செலவு பிடிக்கும் என்பதை அங்கு வசித்து வரும் இந்தியத் தம்பதி ஒருவர் வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளனர்.

தங்களது மாதந்திர அடிப்படை வாழ்வாதாரச் செலவுகள் மட்டுமே இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் ரூபாயைத் தாண்டுவதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ, வெளிநாட்டு வாழ்க்கையைக் கனவு காணும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தம்பதியினர் வெளியிட்டுள்ள பதிவில், சிங்கப்பூரில் வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட உணவுப் பொருட்களின் விலைகள் எந்த அளவுக்கு விண்ணை முட்டும் அளவில் உயர்த்தப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். ஒரு சாதாரண வீட்டின் வாடகையே மாதத்திற்குப் பெருந்தொகையாகச் செலவழியும் சூழலில், குழந்தைகள் கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கணிசமான தொகை தேவைப்படுகிறது.

வெளியிலிருந்து பார்ப்பதற்குச் சிங்கப்பூர் வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாகவும் அழகாகவும் தெரிந்தாலும், அங்கு மாதக் கடைசியில் அனைத்து பில்களையும் கட்டி முடிப்பதற்குள் பட்ஜெட் தலைகீழாக மாறிவிடுகிறது என்று தங்களது அனுபவத்தை அந்தத் தம்பதியினர் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பதிவு வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, ஆயிரக்கணக்கான இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகளில் சம்பாதிக்கும் தொகை அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப அங்குள்ள வாழ்க்கைச் செலவுகளும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்ற நிதர்சனமான உண்மையை இந்தப் பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதோடு அப்பாடா… சம்பளம் அதிகமா கிடைக்குதேனு கண்ணை மூடிக்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடுறதுக்கு முன்னாடி, அங்க இருக்குற இந்த மாதிரி அத்தியாவசியச் செலவுகளைப் பத்தியும் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கணும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>