இந்தியத் தலைநகர் டெல்லியில் மழைக்காலம் தொடங்கினாலே போதும், நாட்டின் மிகப்பெரிய மற்றும் சொகுசான பகுதிகள் கூட ஏரிகளாகவும் ஆறுகளாகவும் மாறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், டெல்லியின் மிகவும் மதிப்புமிக்க கார்ப்பரேட் மற்றும் குடியிருப்புப் பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில், மழைநீரால் நிரம்பி வழியும் சாலையில் நபர் ஒருவர் மிதவைப் படகில் ஜாலியாகச் சவாரி செய்த சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்ப்பரேட் சாலைகள் அனைத்தும் ஆற்றுப் படுகைகளாக மாறியுள்ள நிலையிலும், தனது அசாத்தியமான முயற்சியால் கார்ப்பரேட் ஏரியாவையே படகுப் பாதையாக மாற்றிய அந்த நபரின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில் பெய்த கனமழையால் டெல்லியின் பிரதான சாலைகள் அனைத்தும் முழங்கால் அளவிற்கு மேலாக நீர் தேங்கிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பல இடங்களில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்க, இந்த நபரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது மிதவைப் படகை எடுத்துக்கொண்டு சாலையில் சவாரி செய்யத் தொடங்கினார்.
மேலும் “டெல்லி மாநகராட்சியின் உள்கட்டமைப்பு லட்சணம் இப்படித்தான் இருக்கும்” என்பதை நகச்சுவையாகவும், அதே சமயம் ஆட்சியாளர்களின் முகத்தில் கரியைப் பூசும் வகையிலும் அவர் செய்த இந்தச் செயல், சாலையில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தப் பதிவு வெளியான குறுகிய நேரத்திலேயே ஆயிரக்கணக்கான நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. “தலைநகரின் உள்கட்டமைப்புச் சீர்கேட்டை இதைவிடச் சிறப்பாக யாராலும் தோலுரித்துக் காட்ட முடியாது” என்று பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மழைக் காலத்தில் தேங்கும் கழிவுநீரால் பரவும் நோய்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில், டெல்லி மாநகராட்சியின் அலட்சியப் போக்கை சுட்டிக்காட்டும் இந்த விசித்திரமான பதிவு, இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் ஆட்சியாளர்களுக்கு ஒரு சாட்டையடி எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
See this Instagram video by @shree4085 https://t.co/Or3XetC3tY
“>
