நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துப் பெற்ற விழிப்புணர்வின் மூலம், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை ஒரு 8 வயது சிறுமி தைரியமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் கோடம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரான பெரியன் என்பவர், சிறுமிக்குத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த மே 30-ம் தேதி நடந்த இந்தச் கொடுமையை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 30-ம் தேதி தனது தந்தையிடம் சிறுமி தைரியமாகக் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாவதி மற்றும் உதவி ஆய்வாளர் ரேணுகா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த பெரியன் மீது போக்ஸோ சட்டம் பிரிவுகள் 7 மற்றும் 8-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

“>

 

தவறுகளைத் தட்டிக் கேட்கும் விழிப்புணர்வுத் திரைப்படங்களும், பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலும் இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு எப்படிக் காரணமாக அமைகின்றன என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.