கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் ஒரு ஒப்பந்ததாரராகவும் இருந்தவர் என்பதால், கடந்த ஆட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் எவ்வளவு சதவீதம் கைமாறியது என்பது தனக்கும் தெரியும், அவருக்கும் நன்றாகத் தெரியும் என்று ஆர்.எஸ்.முருகன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஒப்பந்தப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு தவெக எம்எல்ஏவே முன்னாள் அமைச்சரை நேருக்கு நேர் குற்றம்சாட்டியிருப்பது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

முன்னாள் அமைச்சரின் துறைசார் நடவடிக்கைகள் குறித்து ஒரு சட்டமன்ற உறுப்பினரே பகிரங்கமாக கமிஷன் புகாரை எழுப்பியுள்ள இந்த விவகாரம், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் அரசியல் விவாதமாக மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.