ஸ்ரீ கங்கநகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின்போது, கூட்டத்தில் அழுது கொண்டிருந்த சிறுவன் ஒருவனைப் பார்த்து, பாடகர் பர்மிஷ் வர்மா பாதியிலேயே தனது கச்சேரியை நிறுத்தி, அச்சிறுவனை மேடைக்கு அழைத்து பத்திரமாக மீட்ட சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக நடைபெற்ற அந்த பிரம்மாண்டமான கச்சேரியில், மக்கள் நெரிசலுக்கு நடுவே சிறுவன் தனியாக அழுது கொண்டிருப்பதைக் கண்ட பாதுகாவலர்கள், அவனை மீட்டு பர்மிஷ் வர்மாவிடம் ஒப்படைத்தனர். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர், உடனடியாக இசையை நிறுத்திவிட்டு, அந்தச் சிறுவனின் பெற்றோர் யார் என்று மேடையிலிருந்தே விசாரித்தார்.
சிறுவனின் தாய், பர்மிஷ் வர்மாவைப் புகைப்படம் எடுப்பதிலும், ரீல்ஸ் (Reel) எடுப்பதிலும் மும்முரமாக இருந்ததால், குழந்தையைக் கவனிக்காமல் விட்டுச் சென்றது தெரியவந்தது. இதைக் கண்ட பர்மிஷ் வர்மா, மேடையிலிருந்தே அந்தப் பெண்ணைக் கண்டித்ததுடன், “குழந்தையை ஒரு புகைப்படம் எடுக்கும் கருவியாக நினைக்காதீர்கள், குழந்தைகளுடன் இதுபோன்ற கூட்டமான இடங்களுக்கு வரும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
Parmish Verma spotted & safely picked up an unattended kid near the stage while the mom was busy taking reels in the crowd.
Social media validation is endangering kids more than AI. pic.twitter.com/WebLdXtXUs
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 19, 2026
“>
குழந்தையின் பாதுகாப்பை விடப் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோருக்கு, அவரது இந்த அதிரடி செயல் ஒரு சிறந்த பாடமாக அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
